தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூனை வளர்த்தவரின் வீட்டிற்கே திரும்பிய அதிசயம்! - kerala

கோட்டயத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு காணாமல் போன பூனை மீண்டும் தன்னை வளர்த்தவரின் வீட்டிற்குத் திரும்பியது.

2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பூனை வளர்த்தவரின் வீட்டிற்கு திரும்பிய அதிசயம்!!
2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பூனை வளர்த்தவரின் வீட்டிற்கு திரும்பிய அதிசயம்!!

By

Published : Sep 19, 2022, 10:13 PM IST

கோட்டயம்(கேரளா): புதுப்பள்ளியில் வசிக்கும் உஷா மற்றும் குடும்பத்தினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா காலத்தில் காணாமல் போன தங்களின் செல்லப்பூனை ரதீஷ், இந்த வாரம் வீடு திரும்பியதால் இன்ப அதிர்ச்சிக்குள்ளாயினர்.

உஷாவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் செல்லப் பிராணியைக் காணவில்லை என்று பல நாட்களாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடினர். ஆனால், அவர்களால் பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, குடும்பத்தினர் அதை இழந்துவிட்டதாக நினைத்தனர்.

இருப்பினும், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய ரதீஷ், திரும்பி வந்தபோது தன்னை வளர்த்தவர்கள் அறியும் வகையில், தனது உடலைத்தேய்த்து தனது அன்பை வெளிப்படுத்தியது.

ரதீஷ் தனது ஆதரவாளர்கள், தனது பெயரைக் கூப்பிடும்போது அவர்களுக்குப் பதிலளிக்கும். அவர்கள் அழைக்கும்போது அவர்களிடம் விரைந்து செல்கிறது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் உஷாவின் வீட்டிற்கு வந்த இந்தப் பூனை அன்றிலிருந்து குடும்பத்தின் அன்பான உறுப்பினராக மாறிவிட்டது.

கரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்த போது, ரதீஷ் வீட்டில் இருந்து காணாமல் போனது. அதனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணானது. பூனை காணாமல் போனது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் இந்த வாரம் உஷாவின் பக்கத்து வீட்டிற்குப் பூனை திரும்பியது. தனது பூனை திரும்பியதை உஷா அறிந்தவுடன் தனது பக்கத்து வீட்டிற்கு சென்று ரதீஷ், என அதன் பெயரை சொல்லி கூப்பிட்டார்.

பூனை உடனடியாக உஷாவிடம் பாய்ந்து, அவளது கையை முகர்ந்து, தன் உடலை அவள் மீது தேய்த்தது. பின்னர் பூனைக்கு உணவளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பிய பூனையைப் பார்க்க தற்போது ஏராளமானோர் வருகின்றனர்.

இதையும் படிங்க: Viral Video - நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details