லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சமருமான ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்த தினம் இன்று (ஜூலை.05). கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பாஸ்வான் உயிரிழந்தார்.
இந்நிலையில், ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவை போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், "எனது நண்பரான மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்த தினம் இன்று. அவரை இழந்து நான் வாடுகிறேன். நாட்டின் அனுபவமிக்க தலைவரான பாஸ்வான், ஏழைகளை மேம்படுத்துவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார்" எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஸ்வான் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பாஸ்வானின் மறைவுக்குப்பின் அவரது மகன் சிராக் பாஸ்வான் கட்சிக்கு தலைமை ஏற்ற நிலையில், தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மோடி எஃபக்ட்: வேலையை துறந்து டீ கடை வைத்த பொறியாளர்