தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்த் திரைத்துறை குறித்து தவறான தகவல் பரவி வருகிறது: பவன் கல்யாண் கருத்துக்கு நாசர் விளக்கம்! - நடிகைகள்

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் நிலையில் சினிமாவில் தமிழ்த் தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய நடிகர் சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 27, 2023, 8:07 PM IST

நாசர் விளக்கம்

ஹைதராபாத்:சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் சினிமாவில் தமிழ் தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் எனப் பேசியிருந்தார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பூர்ணா ஸ்டுடியோவில் வைத்து பேசிய நாசர் இதனை குறிப்பிட்டார்.

இதனை குறிக்கும் விதமாக ஆந்திராவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில், குறுகிய மனப்பான்மையில் இருந்து தமிழ் சினிமா வெளியே வர வேண்டும் என நடிகர் பவன் கல்யாண் பேசி இருந்தார். மேலும், ஒரு பணியை நம் மக்களை வைத்து மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலான நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் வைத்து பேசியுள்ள அவர், மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது எனவும்; இது முற்றிலும் தவறான செய்தி எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால், தமிழ்த் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன் எனவும் நாசர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், பான் இந்தியா, குளோபல் என சினிமா துறை விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது; இந்தச் சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் நாசர் கூறியுள்ளார்.

மேலும், ''தமிழ்த் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்ப் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல'' எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்புடனும், மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ்த் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இதனால், அன்பான சகோதரர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அனைவரும் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்கி, உலக அளவில் அதை கொண்டு செல்வோம் என நாசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசியல்வாதிகள் நடிகராகும்போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆகக்கூடாதா: விஷால் கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details