சிக்கபல்லாபுரா:Miscreants broke statue of Saint Anthony:கர்நாடகாவில் கடந்த வியாழன் (டிசம்பர் 23) அன்று மதம் மாற்ற தடை சட்ட எதிர்ப்பு மசோதா 2021 பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் படி, ஒருவர் தன் மதத்திலிருந்து கட்டாயத்தின் பேரிலேயோ, வற்புறுத்துதல் காரணமாகவோ அல்லது திருமணத்தின் பெயராலோ மாற்றக் கூடாது, இவ்வாறு வற்புறுத்துபவர்களுக்கு சிறை தண்டனை வழங்க முடியும்.
சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் நடந்தால், அந்தத் திருமணம் குடும்ப நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்படும்.