மீட்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சிறார்கள் கரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்தவர்கள்.
ராக்கி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையினர் சோதனை செய்ததில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரிசாலி லைஃப் ஷோ என்னும் அறக்கட்டளை சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்திவந்ததாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் சோதனை செய்துள்ளனர்.
காப்பகத்தில் சோதனை நடத்தியபோது சமையல்காரரை தவிர வேறு பணியாளர் யாரும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை கடத்தலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்தக் குழந்தைகள் காப்பகம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் காப்பகம் வெறும் 20 நாள்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டதும் தெரிந்தது.
இந்த சிறார்கள் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சைல்டு லைன் எண்ணுக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட சிறார்கள் குழந்தைகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு!