கிழக்கு அசாமில் உள்ள தின்சுகியா மாவட்டம் ஜாகனில் உள்ள கதகதானி பகுதியில் சுஜாய் ஹஜோங் (12) என்ற சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்ததைக் கண்டு ஈர்க்கப்பட்டு அதன் அருகே சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக அப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த சிறுவன், உயிருக்குப் போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார்.
தொடர்ந்து, தகலறிந்து அவரை மீட்டக் காவல் துறையினர், அச்சிறுவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.