தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... மன அழுத்தத்தால் தந்தை தற்கொலை - போக்சோ

கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியின் தந்தை மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

By

Published : Oct 25, 2021, 9:54 PM IST

கேரள மாநிலம், கோட்டயத்தில் 10 வயது சிறுமி, அவரது வீட்டின் அருகில் உள்ள 74 வயது மளிகைக் கடைக்காரரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

சிறுமி முதியவரின் கடைக்கு பொருள்கள் வாங்க சென்று வந்த நிலையில், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதுடன் அவரிடம் இனிப்புகள் வழங்கி இவ்விஷயம் குறித்து யாரிடமும் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்தடுத்த நாள்களில் சிறுமி சோர்வாகக் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முதியவர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில், தனது குழந்தையின் நிலை கண்டு மன அழுத்தத்தில் இருந்து வந்த அவரது தந்தை (42) இன்று (அக்.25) காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக

இது குறித்து சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது முதல் தனிமையில் இருந்ததால் சிறுமியின் தந்தை மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு - போலீசாரை தாக்க முயன்ற ரவுடியுடன் குடும்பத்தார் கூண்டோடு கைது!

ABOUT THE AUTHOR

...view details