ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்துவருகிறார் புகாரளித்த சிறுமி. அவருக்கு 16 வயது நிரம்பிய நிலையில் அவரது பெற்றோர் 34 வயதான நபருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
34 வயது நபருடன் கட்டாய திருமணம்; பெற்றோர் மீது புகார் கொடுத்த சிறுமி - குழந்தை திருமணம்
தன்னைக் கட்டாயப்படுத்தி 34 வயதான நபருடன் திருமணம் செய்துவைக்க முயற்சிசெய்வதாக பெற்றோர் மீது சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார்.
Minor girl fights back against her child marriage!
இதனையறிந்து சிறுமி மறுக்கவே அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி உள்ளூர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்ததைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர்களுக்கும் இதுதொடர்பாகத் தகவல் அளித்துள்ளனர். அவர்களும் விசாரணை செய்துவருகின்றனர்.