ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த சிறுமியை மீட்க சென்ற அவரது சகோதரி கடத்தப்பட்டார். இதுகுறித்து பரத்பூர் போலீசார் தரப்பில், "பாரத்பூரில் உள்ள கமான் பகுதியை சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரியுடன் அருகிலுள்ள பண்ணைக்கு பணிக்காக சென்றிருந்தார். அப்போது, சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று சிறுமியை கடத்தி சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... மீட்க சென்ற சகோதரி கடத்தல்... - ராஜஸ்தான் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் ஒன்று மீட்க வந்த சிறுமியின் சகோதரியை கடத்தி சென்றுள்ளது.
இதையடுத்து அந்த கும்பல், சிறுமியின் சகோதரிக்கு போன் செய்து, உனது தங்கையை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளது. இதை நம்பி சென்ற சகோதரியை அந்த கும்பல் கடத்தி சென்றது. இதனிடையே சிறுமியை விடுவித்தது. இந்த சிறுமி வீடு திரும்பிய அளித்த தகவலின்பேரில் எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:குளோரோஃபார்ம் கொடுத்து பெண் பாலியல் வன்புணர்வு... போட்டோ எடுத்து மிரட்டிய அரசு ஊழியர்...