உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமியை, 25 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று மாலை (ஜன.16) வீட்டிற்குள் புகுந்து கடத்திச் சென்றுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வயலில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், இது தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை ரத்தம் ஒழுகும் காயங்களுடன் வயலிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த கிராமத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.