தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தண்டவாளத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குவியும் பாராட்டுகள்! - Mumbai Railway deaprtment

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழுந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு மும்பை மண்டல ரயில்வே மேலாளரும், ஊழியர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

Ministry of Railways twitter
Ministry of Railways twitter

By

Published : Apr 20, 2021, 1:06 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் நடைபாதையில் நேற்று (ஏப்ரல் 19) குழந்தையுடன் பெண் ஒருவர் நடந்துகொண்டிருந்போது, தவறுதலாக ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் குழந்தை தவறிவிழுந்தது.

தண்டவாளத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குவியும் பாராட்டுகள்

அதேநேரத்தில், புறநகர் ரயில் ஒன்று அதே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இச்சூழலில் குழந்தையின் தாயார் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், குழந்தையை மீட்க முடியாமல் திண்டாடிய நிலையில், அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவு என்பவர் துரிதமாக ஓடிச்சென்று குழந்தையை தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருந்து நடைபாதையில் ஏற்றிவிட்டு, தானும் தப்பித்துக்கொண்டார். நொடிப்பொழுதில் நடந்தேறிய இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பான காணொலியைப் பகிர்ந்த இந்தியன் ரயில்வே, ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டை அதிகளவில் இணையதளவாசிகள் பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் மத்திய ரயில்வே துறையின் மும்பை மண்டல ரயில்வே மேலாளரும், ஊழியர்களும் சேர்ந்து மயூர் ஷெல்கேவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும் அவர்தான் வாழ்க்கையின் நிஜ ஹீரோ என்றும் புகழாரம் சூட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details