தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிக்ஜாம் புயல் பாதிப்பு; ரூ.450 கோடி நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு! - மிக்ஜாம் புயலுக்கான நிவாரண தொகை

cyclone michaung: மாநில அரசுகளுக்கு தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதற்கான நிவாரணாத் தொகை ரூபாய் 493.60 கோடியை முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது தவணை நிவாரணத் தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
இரண்டாவது தவணை நிவாரணத் தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 2:28 PM IST

டெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் (NDMF) கீழ் சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் உதவித்தொகை ரூ.500 கோடியுடன் சேர்த்து முதல் நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டம் ரூ.561.29 கோடியை வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

இதனைத் தொடர்ந்து தற்போது மாநில அரசுகளுக்குத் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதற்காக, மாநில பேரிடர் மீட்புப் படையின் 2வது தவணையாக மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை தமிழகத்திற்கும், ரூ.493.60 கோடியை ஆந்திராவுக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரு மாநிலங்களுக்கும் முதல் தவணைத் தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்; மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கத் தயார் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details