டெல்லி: உதய்பூரில் நூபுர் சர்மாவின் ஆதரவாளர் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமான விசாரணையை மேற்கொள்ளுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு , அமித் ஷா தலைமையின் கீழ் இயங்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் வசித்து வந்த கன்ஹையா லால், சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் குறித்த அவதூறு பரப்பியதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனால் ரியாஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் கன்ஹையா தலையைத் துண்டித்துக் கொன்றனர். இதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். இச்செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.