டெல்லி:கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையில் பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விமான சேவை நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டத்தணத்தை மட்டுமே வசூலித்துவந்தன. இந்த கட்டண உச்ச வரம்பை, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு நீக்கப்போவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா அறிவித்துள்ளார்.
இதனால் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. அதோடு தங்கள் நிறுவன விமானங்களில் பயணிகளை நிரப்ப குறைந்த விமானக் கட்டணங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.