புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் நேற்று நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் மேற்குவங்கம் முதலமைச்சரும், நானும் தடுப்பூசிக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என கேள்வி எழுப்பினோம். மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
தடுப்பூசி குறித்த அச்சம் மக்களுக்கு இருக்கக்கூடாது. ஆகவே அரசியல் கட்சியினர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி போட வேண்டும். இதனால் மக்களுக்கும் தடுப்பூசி மீது நம்பிக்கை வரும். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.