தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாசுபாட்டில் கவலைகொள்ள வேண்டுமே தவிர கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் அல்ல - சிவசேனா எம்பி - கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்

டெல்லி: கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் குறித்து கவலை கொள்வதைத் தவிர்த்துவிட்டு டெல்லி மாசுபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

By

Published : Mar 18, 2021, 3:05 PM IST

இரண்டாம் கட்ட நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்து கருத்து தெரிவிப்பதை விட்டுவிட்டு டெல்லியில் நிலவும் மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கவலைகொள்ள வேண்டும்.

டெல்லி மாசுபாடு குறித்த விவகாரத்தை அமைச்சர் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்து சமீபத்தில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details