புதுச்சேரி, ஊசுடு தனித்தொகுதியில் பாஜக சார்பாக சாய் சரவண குமார் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் புதுவை அரசின் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சமீபகாலமாக அமைச்சர் சாய் சரவணன் குமார், தனது துறைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார். இந்தச் சுழலில் மாநில சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில், ஊசுடு தொகுதி மக்களை சந்தித்து அவர்களது பகுதிகளில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர் யாரும் எதிர்பாராத விதமாக தரையில் அமர்ந்து, தனது தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்கத் தொடங்கியது அங்கு கூடியிருந்தோரிடம் வியப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் புதுவை மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில், அமைச்சர் சாய் சரவண குமார், தனது தொகுதி மக்களுடன் தரையில் அமர்ந்து குறைகள் கேட்டறிந்த இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:பக்கா பட்ஜெட் ப்ளான் - அமைச்சர், அலுவலர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்!