புது டெல்லி: இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (FICCI) ஏற்பாடு செய்திருந்த 'சாலை விபத்துக்களை கையாள்வதில் கார்ப்பரேட்டுகளின் பங்கு' குறித்த மெய்நிகர் அமர்வில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதினி கட்கரி உரையாற்றினார்.
அப்போது பாதுகாப்பான அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சாலை பாதுகாப்பு கூட்டமைப்பு 'சஃபர்' அறிவித்த கார்ப்பரேட் அமைப்பை வாழ்த்தினார். மேலும் கார்ப்பரேட்டிற்கான சாலை பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை இதையடுத்து பேசிய அவர், "சாலை விபத்து இறப்புகளைக் குறைக்க தனது அமைச்சகம் கடுமையாக முயற்சிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரத்திலும் உள்ள 'கரும்புள்ளிகளை' அடையாளம் காண வேண்டியதன் அவசியம் உள்ளது. இந்த கரும்புள்ளிகளை நீக்குவதற்காக மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பிற பங்குதாரர்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உலக வங்கி, ஏடிபி ஏற்கனவே ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து மரணங்களை 50 விழுக்காடு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை: பல மாநிலங்களில் சதம், சென்னையில் சதமடிக்க தயார்