டெல்லி:சென்னை - பெங்களூரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 100 கிலோ மீட்டரைக் கடப்பதற்கு 4 மணிநேரம் ஆகிறது. சாலையில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணிகளின் நிலை என்ன, விரைவுச் சாலை பணியின் நிலை என்ன என்று சென்னை மத்திய தொகுதி எம்.பி.,தயாநிதிமாறன் மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'திட்டங்களை செயல்படுத்தி முடிக்க மத்திய அரசுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை' என்றார். 'விரைவுச்சாலையின் பணிகள் பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நிலமோ, அனுமதியோ வழங்காமல் ஒப்பந்ததாரர்களால் எப்படி வேலை பார்க்க முடியும்' என்றார்.