தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாராயணசாமி எப்போதும் குறை சொல்லி அரசியல் செய்து பழக்கப்பட்டவர் - நமச்சிவாயம் - புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் குறை சொல்லி அரசியல் செய்து பழக்கப்பட்டவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜக மீது குற்றம் சுமத்தி வருகிறார் எனப் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

By

Published : Dec 2, 2021, 10:12 PM IST

புதுச்சேரிமாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் குறை சொல்லியே அரசியல் செய்து பழக்கப்பட்டவர். அவர் எந்த விதத்தில் மத்திய அரசு முடக்குகிறது என்று சொல்லவேண்டும். மத்திய அரசு அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றோம்.

அமைச்சர் நமச்சிவாயம்

அன்றும் அதைத்தான் செய்தார், இன்றும் அதைத்தான் செய்து வருகிறார்

மத்திய அரசின் மக்களுக்குத் தேவையான எல்லாத் திட்டங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பாஜக மீது பழி சுமத்தி வருகிறார். அன்றும் அதைத்தான் செய்தார், இன்றும் அதைத்தான் செய்து வருகிறார்.

மத்திய, மாநில அரசு என்றும் இணக்கமாக்கத்தான் உள்ளது மத்திய அரசிடம் நாங்கள் கேட்கும் திட்டங்கள் எல்லாம் செய்துதான் வருகின்றார்கள். அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details