புதுச்சேரி: தனியாக வரும் பெண்கள், பெண் காவலர் ஒருவர் உதவியுடன் நான்கு சக்கர வாகனத்தில் அவர்களது வீடுகளுக்கே கொண்டுசென்று விடப்படுவார்கள் என சட்டப்பேரவையில் உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி காவல் துறையின் மானியக் கோரிக்கையின் மீது நமச்சிவாயம் பேசினார்.
அப்போது அவர், "நமது புதுச்சேரி மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதைத் தடுத்து கஞ்சா பழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, புதுச்சேரி காவல் துறை மூலம் ஆப்பரேஷன் விடியல் என்ற பெயரில் 2021 ஜூலை 19 முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.