புதுச்சேரி: மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் இன்று (செப்.05) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் பிறந்த நாள் பேனர்களை வைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று புதுவை திருபுவனை கிராமப் பகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் தனது துணைவியாருடன் சாரட் வண்டியில் பிரமாண்டமாக ஊர்வலம் வந்தார். அவரது பிறந்தநாளையொட்டி இந்த நிகழ்வினை பாஜகவினர் நடத்தியுள்ளனர்.