புதுச்சேரி: சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்த வருகிறது. இந்நிலையில், கதிர்காமத்தில் அமைந்துள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (நவம்பர் 29) சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பரிசோதனைக்காக வந்திருந்த நோயாளிகளைச் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை... ஆய்வுக்கு சென்ற அமைச்சருக்கு நன்றி கூறிய கரோனா நோயாளிகள்
புதுச்சேரியின் கதிர்காமத்தில் அமைந்துள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம், தங்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்படுவதாக கரோனா நோயாளிகள் தெரிவித்தனர்.
சுத்தமான முறையில் மருத்துவமனை வளாகத்தைப் பராமரித்துவரும் ஊழியர்களை அமைச்சர் பாராட்டினார். உணவு, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் தனியார் மருத்துவமனையின் தரத்தைவிட சிறப்பாக உள்ளதாக நோயாளிகள் தெரிவித்ததையடுத்து பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆகியோருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். ஆய்வின்போது, இயக்குநர் மோகன் குமார், மருத்துவமனை இயக்குநர் மாணிக்க தீபன், மருத்துவ கண்காணிப்பாளரான மருத்துவர்கள் ரமேஷ், ரவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கரோனாவை கட்டுப்படுத்தி சென்னை மாநகராட்சி சாதனை