தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வந்தடைந்த மாரியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்திய மா. சுப்பிரமணியன் - மாரியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்திய மா.சு

ஜப்பானிலிருந்து டெல்லி வந்தடைந்த மாரியப்பன் தங்கவேலுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

Ma Subramanian
மா.சு

By

Published : Sep 3, 2021, 7:41 PM IST

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3), டோக்கியோவிலிருந்து தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு டெல்லி திரும்பினார்.

மாரியப்பனை நேரில் வரவேற்ற மா.சு.

டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் மாரியப்பனை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

மாரியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்திய மா.சு.

அப்போது, அவருடன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உடனிருந்தார். முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details