தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் - புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான்

புதுச்சேரி: புதுவை அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு அத்துறைக்கான அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் ஷாஜகான்
அமைச்சர் ஷாஜகான்

By

Published : Dec 28, 2020, 1:04 AM IST

அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட கோரி இன்று (டிசம்பர் 28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அனைத்து பிரிவு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம், அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்ப்பதாக கூறி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அரசுக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. போக்குவரத்து துறையில் உள்ள நிதி பற்றாகுறையை சமாளிக்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details