தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு உடல்நலக்குறைவு :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி ! - அன்பில் மகேஷ் மருத்துமனையில் அனுமதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

minister-anbil-mahesh-get-treatment-in-bangalore-hosiptal
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி !

By

Published : Aug 12, 2023, 7:12 PM IST

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி !

பெங்களூரு:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலத்தில் நடைபெற்ற பாரதி வித்யாலய சங்கத்தின் பவள விழா மற்றும் தனியார் பள்ளிகளுக்களுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் மருத்துவமனையிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். லேசான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த, அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரன், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் திமுகவினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

தொடர்ந்து உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில் அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, பரிசோதனைக்கு பிறகு பெங்களூர் விமான நிலையம் மூலம் சென்னை புறப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனை அடித்த ஆசிரியை- பெற்றோர் போலீசில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details