புதுச்சேரி: அரசு கூட்டுறவு பால் வினியோகம் செய்யும் 'பாண்லே' பால் விற்பனை முகவர்களுக்கு எவ்வித காரணம் இன்றி விற்பனைக்கான பாலின் அளவை குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் பாக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காலி பாக்ஸ்களுடன் பால் முகவர்கள் போராட்டம்!
'பாண்லே' பால் விற்பனை தொழிலாளர்களுக்கு காரணமின்றி விற்பனைக்காக பாலின் அளவை குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் காலி பாக்ஸ்களுடன் பால் முகவர்கள் போராட்டம்
இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கக்கூடிய நிலையை 'பாண்லே' நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்தும் தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்பனையாளர்களுக்கு பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தியு ஏஐடியுசி 'பாண்லே' பால் விற்பனை தொழிலாளர் சங்கத்தினர் சட்டமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:இந்தாண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு