டெல்லி:பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங் என்பவர் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் பூன்ச் பகுதியில் அம்ரித்பால் சிங் பணியாற்றி வந்த நிலையில் கடந்த அக். 10ஆம் தேதி பணியில் இருந்த போது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாப்புக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அக்னிபாத் வீரர் அம்ரித்பால் சிங்கின் உடலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்படவில்லை என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ராணுவம், அமிரித்பால் சிங் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டதால் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், இதனால் வழக்கமான முறைப்படி அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இருப்பினும் அவருடன் பணியாற்றிய சக வீரர்கள் அமிரித்பாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 2 முறை விளக்கம் அளித்துள்ள ராணுவம், இது குறித்து x தளத்தில் தெரிவித்து உள்ளதாவது, "அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த அம்ரித்பால் சிங் துரதிர்ஷ்டவசமாக கடந்த 11 அக்டோபர் 2023 அன்று, உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாகத் தவறான புரிதல்கள் உள்ளன. அக்னி வீரர் என்பதால், இறுதிச் சடங்கிற்கு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.