தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குப்வாரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - Kupwara encounter

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பயங்கவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

militant-killed-another-trapped-in-kupwara-encounter
militant-killed-another-trapped-in-kupwara-encounter

By

Published : Jun 19, 2022, 3:31 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துவருகிறது. அந்த வகையில், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுக்காப்பு படையினருக்கு இன்று (ஜூன் 19) தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், சவுகத் ஷேக் அகமது என்னும் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று (ஜூன் 18) ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெலங்கானா வன்முறையில் உயிரிழந்த இளைஞர் யார் தெரியுமா...?

ABOUT THE AUTHOR

...view details