மும்பை: நாசிக் நகரின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது உருவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறியபடி வீதிகளுக்கு வந்தனர்.