தமிழ்நாடு

tamil nadu

ஓராண்டாக வேலையில்லை, நிலைமை படுமோசம்- டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி வேதனை!

By

Published : Jun 4, 2021, 4:42 PM IST

கடந்த ஓராண்டாக எந்த வேலையும் இல்லை, நிலைமை படுமோசமாக உள்ளது என டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி ஈடிவி பாரத்திடம் வேதனை தெரிவித்தார். -

Migrant labourers
Migrant labourers

டெல்லி: தலைநகர் டெல்லியில் கோவிட் பாதிப்புகள் குறைந்துவருகின்றன. இதனால் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்கள் நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கம் காரணமாக தொழில்கள் சகஜ நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிவருகின்றன.

இந்நிலையில் கோவிட் பரவல் அச்சம் காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய குடிபெயர் தொழிலாளிகள் தற்போது வேலை காரணமாக டெல்லிக்கு திரும்பிவருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் சீத்தாபூரிலிருந்து டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி ஒருவர் ஈடிவி பாரத்திடம் பேசினார்.

அப்போது அவர், 'நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த ஓராண்டாக எந்த வேலையும் இல்லை. பிழைப்பு கடினமாகிவிட்டது” என்றார். முன்னதாக கோவிட் பரவல் உச்சத்தில் இருந்த போது டெல்லியை விட்டு தொழிலாளர்கள் வெளியேறினர்.

ஓராண்டாக வேலையில்லை, நிலைமை படுமோசம்- டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி வேதனை!

தற்போது அவர்கள் மீண்டும் டெல்லிக்கு திரும்பிவருகின்றனர். முன்னதாக, தொழிலாளர்கள் டெல்லியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க மாநில அரசு இலவச ரேஷன் பொருள்களை அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு முதலமைச்சர், ஒன்பது சூப்பர் முதல்வரா? பாஜக கேள்வி

ABOUT THE AUTHOR

...view details