தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து! - MiG-21 ரக போர் விமானம் விபத்து

MiG-21 ரக போர் விமானம்
MiG-21 ரக போர் விமானம்

By

Published : Jan 5, 2021, 9:37 PM IST

Updated : Jan 5, 2021, 10:22 PM IST

21:34 January 05

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் இந்திய விமான படையின் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் அருகே இந்திய விமான படையின் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெறும் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.  

இது குறித்து இந்திய விமான படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு செக்டாரில் விமான பயிற்சியின்போது, மிக்-21 பைசன் ரக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், 8.00 மணி அளவில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். எந்த உயிர்ச்தேசமும் நிகழவில்லை. விபத்தின் காரணம் குறித்து ஆராயும் வகையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதேபோல், 2019ஆம் ஆண்டு, தேசிய விண்வெளி ஆய்வகத்திலிருந்து ராஜஸ்தான் பிகானேருக்கு வழக்கமான போர் பயிற்சிக்காகச் சென்ற மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும்போது பறவை மோதியதால் அந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவந்தது.

Last Updated : Jan 5, 2021, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details