தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்யவுள்ள இளம் காவலர்கள் - தேசிய அளவிலான மாநாடு

சைபர் கிரைம் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் உள்ள இளம் காவல் கண்காணிப்பாளர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் தேசிய மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது.

mha-to-organise-conference-on-cyber-crime-and-uav
mha-to-organise-conference-on-cyber-crime-and-uav

By

Published : Dec 7, 2020, 5:33 PM IST

டெல்லி: காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் சார்பில் இளம் காவல் துறை கண்காணிப்பாளருக்கான நான்காவது தேசிய மாநாடு மற்றும் சைபர் குற்றம்-ஆராய்ச்சி மற்றும் அவற்றிலுள்ள புதுமையான விஷயங்கள் ஆளில்லா விமானங்கள் குறித்த காவலர் விளக்க காட்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட இளம் காவல் கண்காணிப்பாளர்கள், மூத்த காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக ஈடிவி பாரத் உடன் பேசிய மூத்த காவல் துறை அலுவலரும் சைபர் கிரைம் பேராசிரியருமான திரிவேணி சிங், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது காலத்தின் தேவை. இது சிறந்த நடைமுறைகளையும் அறிவையும் பகிர்ந்துகொள்வதற்கான தளம். சைபர் கிரைம் அனைவரின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.

நமது உண்மையான சவாலே, கண்ணுக்குத் தெரியாத மற்றும் வளர்ந்துவரும் எதிர்கால குற்றங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதே. இவை ஆபத்தானதும்கூட. எதிர்காலத்தில் ஆளில்லாத விமானங்கள் ஒரு பெரிய சவாலாக மாறும். அதனை எதிர்கொள்ள அனைத்து விதமான படைகளும் தயாராக இருக்க வேண்டும்.

இந்தியாவின் எல்லைகளை தாண்டி வரும் இத்தகைய ஆளில்லா விமானங்களை கண்டறிவது நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இதுபோன்ற பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

மேலும், சைபர் கிரைம் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் உள்ள இளம் காவல் கண்காணிப்பாளர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் தேசிய மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details