கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்சமயம் கரோனா இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்துள்ளன.
இதையடுத்து சுற்றுலாத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், சந்தைகளில் பொது மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். அங்கு முகக்கவசம் அணிதல், உரிய இடைவெளி பின்பற்றுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில உள்துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "பொது வெளியில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதாக எண்ணி அலட்சியமாக செயல்பட வேண்டாம். எனவே விதிமுறைகள் மீறப்படும் இடங்களில் மாநில அரசுகள் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:பாஜக மாநிலங்களவை தலைவராக பியூஷ் கோயல் நியமனம்!