தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் மன அழுத்தத்தால் திருநங்கை தற்கொலை

மும்பையில் வசித்துவந்த திருநங்கை ஒருவர் தன்னை யாரும் பெண்ணாக கருதவில்லை என்பதால் மன அழுத்தத்தில் இருந்தவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் மன அழுத்தத்தால் திருநங்கை தற்கொலை
மும்பையில் மன அழுத்தத்தால் திருநங்கை தற்கொலை

By

Published : Mar 8, 2023, 9:52 AM IST

மும்பை: கோரேகானில் வசிக்கும் ஜோனா என்ற 37 வயது பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆணாக இருந்து பெண்னாக பாலினம் மாறிய இவரை யாரும் பெண்ணாக கருதவில்லை, யாரும் அவரை ஒரு பெண்ணாக நடத்தவில்லை. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஜோனாவின் தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில் தனது சோகத்தை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அவரது தோழியின் வாக்குமூலத்தை பதிவு செய்த கோரேகான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜோனா தற்கொலை செய்து கொண்டது குறித்து கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட ஜோனா 2018 இல் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு வேலைக்காக வந்தார். அவர் கோரேகான், யஷ்வந்த்நகர், ரித்திசித்தி ஹைட்ஸ் குடியிருப்பின் 14வது மாடியில் உள்ள பிளாட்டில் வசித்து வந்துள்ளார். அந்த குடியிருப்பில் ஜோனா தோழி ஒருவருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று காலையில் அவளுடைய தோழி முடி வெட்டுவதற்காக ஒரு சலூனுக்குச் சென்றுள்ளார். பின்னர் பத்தரை மணியளவில் அவர் குடியிருப்புக்கு வந்தபோது, ஜோனா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டுள்ளார். அவர் உடனடியாக ஜோனாவை கோரேகானில் உள்ள எம்ஜி சாலையில் உள்ள கபாடியா மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு ஜோனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கோரேகான் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ஜோனா தற்கொலை செய்த இடத்தில் இருந்து அவரது கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்ரியுள்ளனர். ஜோனா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், அவர் சில வருடங்களுக்கு முன் தனக்குள் பாலின மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதனை அடுத்து அவர் பெண்ணாக மாறி உள்ளார்.

ஆனால், ஜோனாவை யாரும் பெண்ணாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவரை யாரும் பெண் போல நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஜோனாவின் தற்கொலை தொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களும் ஜோனா தற்கொலை செய்து கொண்டதில் யாரையும் சந்தேகிக்கவில்லை. எனவே, போலீசார் ஜோனா மரணத்தை பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆணாக இருந்து பெண் ஆக ஆக மாறிய ஒருவர், யாரும் அவரை பெண்ணாக கருதவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Panipat: பானிபட்டில் சூட்கேஸில் இருந்து பெண் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details