தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூதாட்டியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு! - மூன்று பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சிலர் பழங்குடியின மூதாட்டி ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கியதோடு, அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MH
MH

By

Published : Dec 5, 2022, 4:04 PM IST

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில், கங்காபூர் ஃபாட்டா பகுதியில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(டிச.4) ஓசர் கிராமத்தைச் சேர்ந்த விவேக் என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மூதாட்டியின் பேரன் தனது மகளை அழைத்துக்கொண்டு ஓடிவிட்டதாக விவேக் கூறியுள்ளார். மூதாட்டி இல்லை என்று மறுத்தபோதும், அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் மூதாட்டியை ஓசர் கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, அவரைத் தாக்கியுள்ளனர். மூதாட்டியை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியுள்ளனர். மூதாட்டி கைகூப்பி கெஞ்சியும் அவர்கள் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

அதோடு, தாக்கியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, இதுதொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லூடோவில் தன்னையே பணயமாக வைத்த இளம்பெண்

ABOUT THE AUTHOR

...view details