தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் ஆட்டோ ஓட்டுநரை நிர்வாணமாக துரத்திச்சென்ற பயணி - நடந்தது என்ன? - மகாராஷ்ட்ரா பாலியல் வன்கொடுமை

மகாராஷ்ட்ராவில் கட்ராஜ் காட் பகுதியில் பெண் ஆட்டோ ஓட்டுநரை, பயணி ஒருவர் நிர்வாணமாக துரத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pune
pune

By

Published : Dec 30, 2022, 8:09 PM IST

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த 26ஆம் தேதி இரவு நேரத்தில், நிகில் அசோக் (30) என்ற நபர், 38 வயது பெண்மணி ஒருவரது ஆட்டோவில் ஏறியுள்ளார்.

கட்ராஜ் காட் செல்ல விரும்புவதாக பெண் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இரவு பத்து மணியளவில் ஆட்டோ கட்ராஜ் காட்-ஐ அடைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்த தங்கும் விடுதிக்கு அருகே ஆட்டோவை நிறுத்தும்படி நிகில் கூறினார். இதையடுத்து அந்த பெண் ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது நிகில், பெண் ஓட்டுநரிடம் ஆபாசமாகப் பேசி தகராறு செய்துள்ளார். பின்னர் தனது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்மணி ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.

அந்த பயணியும் நிர்வாணமாக பெண் ஓட்டுநரை துரத்திச் சென்றார். சிறிது நேரத்தில் அந்த பெண்மணி தப்பித்துச் சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மகர்பட்டாவைச் சேர்ந்த நிகில் அசோக்கை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: புனேவில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details