தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரதீபா பாட்டீல் கணவர் மரணம்
பிரதீபா பாட்டீல் கணவர் மரணம்

By

Published : Feb 24, 2023, 10:21 PM IST

புனே:மகாராஷ்டிர மாநிலம், அமராவதியைச் சேர்ந்தவர், தேவிசிங் ஷெகாவத் (89). முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர். 2012-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிரதீபாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தம்பதியர் புனேவில் குடியேறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தேவிசிங் ஷெகாவத் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

எனினும் அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷெகாவத் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "கணவர் மறைவால் வாடும் பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்துக்கு ஆற்றிய பல்வேறு சேவைகள் மூலம் ஷெகாவத் தனி முத்திரையை பதித்தவர்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷெகாவத் 1985-ம் ஆண்டு முதல் 1990 வரை, அமராவதி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடைபெற்ற அமராவதி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார். கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய ஷெகாவத், 1965-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிரதீபா பாட்டீலை மணந்தார். இவர்களுக்கு ராவ்சாகேப் ஷெகாவத் என்ற மகனும், மகளும் உள்ளனர்.

இதையும் படிங்க: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. 182 பயணிகள் நிம்மதி..

ABOUT THE AUTHOR

...view details