நாக்பூர்: மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தால், சிவசேனா இரண்டாக உடைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜகவின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அமைந்தது.
இதனிடையே கடந்த ஜூலை மாதம், ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பியான ராகுல் ஷெவாலே மீது துபாயைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். எம்.பி ராகுல் ஷெவாலே, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உடலுறவு கொண்டு, பிறகு தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில், நேற்று(டிச.22) ராகுல் ஷெவாலே மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சிவசேனா எம்எல்சிகளான அனில் பராப் மற்றும் மனிஷா கயண்டே இருவரும் கோரிக்கை விடுத்தனர்.