தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாராவி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை கைப்பற்றிய அதானி! - tamil latest news

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காண ஏலத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.

தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காண ஏலத்தை கைப்பற்றிய அதானி
தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காண ஏலத்தை கைப்பற்றிய அதானி

By

Published : Nov 30, 2022, 9:18 PM IST

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பையில் உள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காண ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் கேட்டு அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 557 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தாராவி. இதனை மறுசீரமைக்கும் திட்ட பணிகள் தொடர்பாக தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் உலக அளவில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான டெண்டரில், துபாயை சேர்ந்த செகிலிங்க் நிறுவனம் அதிக ஏலம் எடுத்தது. இருப்பினும், அட்வகேட் ஜெனரலின் பரிந்துரையின்படி அப்போதைய அரசாங்கம் 2020 அக்டோபரில் ஏலத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடைபெற்ற ஏலத்தில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதில் டிஎல்ஃப் நிறுவனம் சார்பில் ரூ. 2,025 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையில், அதை விட அதிகமாக அதானி குழுமம் சார்பில் ரூ. 5,000 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டதால், ஏலத்தில் அதானி குழுமம் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த ஏலம் குறித்த விவரங்கள் மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அரசாங்கத்தின் பரிசீலனைக்கு பிறகே இறுதியாக அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தியாங்காங் விண்வெளி நிலையம் சென்ற 3 வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details