ஐதராபாத்:மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க சக்கர்பெர்க் தொழில்நுட்ப உலகத்தில் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் தற்பொழுது தற்காப்பு கலையிலும் கவனம் செலுத்தி சமீபத்தில் நடந்த பிரேசிலிய ஜியு ஜிட்சு தற்காப்பு கலை போட்டியில் ப்ளு பெல்ட் வென்றுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளார்.
39 வயதாகும் மார்க் சக்கர்பர்க், டேவ் கேமரிலோ என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார். ப்ளு பெல்ட் பெற்றதை பெருமையாக கருதுவதாக மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அதற்கு "உங்களை பற்றி அறிந்து கொள்வதும், பயிற்சியின் போது உங்களின் ஆர்வம் மற்றும் சிறந்த ஒழுக்கத்தை கடைபிடித்தீர்கள்” என மார்க் சக்கர்பர்கை பாராட்டியுள்ளார் அவரது பயிற்சியாளர் டேவ்.
மார்க் பிரேசிலிய ஜியு ஜிட்சுவில் ப்ளு பெல்ட் பெற்றதற்கு அவரது ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை தட்டி குவித்து வருகின்றனர். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் ரசிகர்கள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. மேலும், பல நெட்டிசன்கள் இவரது பதிவிர்க்கு கமண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வாயில் பல்லி நுழைந்ததால் சிறுவன் உயிரிழப்பா? சத்தீஸ்கரில் மர்மம்!