தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Meta Layoff : இந்தியர்கள் உள்பட 10 ஆயிரம் பேர் பணி நீக்கம்... மெட்டா அதிரடி முடிவு! - வாட்ஸ் அப் பணியாளர்கள் நீக்கம்

இந்தியர்கள் உள்பட 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Meta
Meta

By

Published : May 25, 2023, 3:59 PM IST

டெல்லி :பேஸ்புக் சமூகவலைதளத்தின் தாய் நிறுவனமான மெட்டா 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கிய பொறுப்புகளில் உள்ள இந்தியர்கள் உள்பட 10 ஆயிரம் ஊழியர்கள் பலர் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கரோனா கட்டுப்பாடுகள் தளர்வானது முதலே உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. மென்பொருள் தொடங்கி பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. நிதி நிலையை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர, பெரு நிறுவனங்கள் முதல் சிறு தொழில் கூடங்கள் வரை கையாண்ட முதல் வேலை பணி நீக்கம்.

கரோனாவுக்குப் பிந்தைய பணியாளர்கள் நீக்க கலாசாரத்தை முதன் முதலில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ட்விட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதலே, 50 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி எலான் மஸ்க் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து அமேசான், டிஸ்னி மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் பணியாளர் நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்து உள்ளது. இந்த முறை ஏறத்தாழ 10 அயிரம் பேர் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணியாளர்கள் நிக்கத்தில் இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. முக்கியப் பொறுப்புகளில் உள்ள இந்தியர்கள் பலர் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிது.

மார்க்கெட்டிங், சைட் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட், கன்டென்ட் ஸ்ட்ரேட்டிஜி மற்றும் கார்ப்பரேட் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்கள் தற்போதைய பணி நீக்கத்தில் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டு தொடக்கத்தில் ஏறத்தாழ 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்து இருந்தது.

கரோனா பரவலின் போது பொழுதுபோக்கு துறையில் ஏற்பட்ட ஏற்றத்தை கருத்தில் கொண்டு அதிகளவிலான ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி அமர்த்தியது. தற்போது அந்த ஊழியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த பணி நீக்கம் குறித்து கடந்த மார்ச் மாத இறுதியில் மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தரப்பில் மார்க்கெட் துறையின் இயக்குநர் அவினாஷ் பன்ட், மீடியா பார்ட்னர்ஷிப் துறையின் தலைவர் மற்றும் இயக்குநர் சாகேத் ஜா சவுரப் ஆகியோர் இந்த பணி நீக்க நடவடிக்கையில் உள்ள முக்கியப் புள்ளிகள் எனக் கூறப்படுகிறது. அவர்களை தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்தியர்கள் இந்த பணி நிக்கத்தில் பாதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க :Disney Layoff : 3வது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் டிஸ்னி... எவ்வளவு பேர் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details