பெண்கள் மாதவிடாய் சமயங்களில் பல்வேறு மன மற்றும் உடல் நல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். சிலருக்கு தாங்கவியலா வயிறு வலி, கால் வலி ஏற்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும். இதனால், மாதவிடாய் நாள்களை அவர்களால் இயல்பாகக் கடக்க முடிவதில்லை.
தோராயமாக அறுபது விழுக்காடு பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் எனப்படும் ஹார்மோன்கள் சீரான நிலையில் இல்லாதபோது, இரண்டு வகையான தலைவலி ஏற்படுகிறது.
1). ஒற்றைத் தலைவலி
2). ஹார்மோன் தலைவலி
ஹார்மோன் மாறுபாடுகளால் மூளையில் சுரக்கும் நரம்பு செல்களில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களை அதிகம் பாதிக்கிறது. மைக்ரேன் உள்ளவர்களுக்கு பதற்றம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகமுள்ளது.
இந்தநபர்களுக்கு மாதவிடாய் நேரங்களில் விளக்குகளைப் பார்க்கும் போது, ஜிக்ஜாக் கோடுகளைப் பார்க்கும்போது தலைவலி அதிகரிக்கலாம். இந்தக் கட்டுரையில் ஒற்றைத் தலைவலியைக் குறைக்க சில வழிமுறைகளை காணலாம்.
போதுமான ஓய்வு
தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கலாம். பகல் தூக்கத்தைவிட இரவில் தூங்குவது நலம். ஒரு நாளுக்கு இரவு 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள்.