உலகின் பல்வேறு நாடுகளில் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்புை போல் மாதவிடாய் விடுப்பும் வழங்கப்படுகிறது. சில நாடுகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாதவிடாய் விடுப்புகள் வழங்கப்படும் வழக்கமில்லை. சில தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுப்பு வழக்கத்தில் உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கிடையாது. பல கல்லூரிகளில் மாணவிகள் மாதவிடாய் விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுப்பதாலும், திருமணமானவர்கள் மகபேறு விடுப்பு எடுப்பதாலும் வருகை பதிவு சதவீதம் குறைவதாலேயே கோரிக்கை எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெண் மாணவிகள் 73 சதவீத வருகைப் பதிவு இருந்தால், செமஸ்டர் தேர்வெழுதலாம் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.