பெங்களூரு:மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நேற்று (மார்ச் 21) நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது அணை கட்டக்கூடிய கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று கண்டனம் தெரிவித்தார். ஒரு மாநிலத்தின் உரிமையை, மற்றொரு மாநிலம் பறிக்கும் விதத்தில் உள்ள தமிழ்நாட்டின் தீர்மானம் மக்கள் விரோதமானது என்றும்; நாட்டின் அமைப்பு மீது தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்தத் தீர்மானம் குறிக்கிறது எனவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
'தமிழ்நாட்டுக்கு பிரச்னையில்லை'
இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் தீர்மானத்தைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.கே பட்டீல் தமிழ்நாட்டின் தீர்மானத்தை அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து, பசவராஜ் பொம்மை,"மேகதாது அணைத்திட்டம் என்பது குடிநீர் மற்றும் மின்சாரம் சார்ந்த வளர்ச்சி திட்டமாகும்.
இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு உபரி நீரை பயன்படுத்துவதற்கு திட்டமிடுகிறது. மேலும், எவ்வித அனுமதியும் இன்றி அதுபோன்ற திட்டத்திற்கு தமிழ்நாடு அடிக்கல் நாட்டுகிறது என நமது கவனத்திற்கு வந்துள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறித்து தமிழ்நாடு அரசு பேசிவருகிறது. இது நம்முடைய நீர் உரிமைக்குப் பேரிடியாகும். நமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
'புலம்பக் கூடாது'