ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தாம் மீண்டும் வீட்டுச் சிறையில் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அவர் அளித்த அலைபேசி பேட்டியில், “என் குடும்பத்தைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது வீட்டுக்கு செல்ல எனக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பர்வேஸ் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற நான் அங்கு செல்ல வேண்டும்” என்றார்.