ஜம்மு:அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான குப்கார் கூட்டணி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை மீண்டும் பெற்று தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக, அம்மாநில மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்ஃதி தெரிவித்துள்ளார்.
மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசிய அவர், " மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, அது எவ்வாறு அவர்களுக்கு பலன் தரும். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை கொண்டுவர நினைத்தால், நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிறீர்கள் என்றுதான் பொருள்.