தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 5:51 PM IST

ETV Bharat / bharat

மிட்னாபூரில் பிரமாண்ட மக்கள் பேரணி : சுவேந்துவுக்கு பதிலாக களமிறக்கப்படும் சத்ரதர் ​​மகாடோ!

கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில், மிட்னாபூரில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட மக்கள் பேரணிக்கான முன்னெற்பாடுகள் அரசியல் களத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

மிட்னாபூரில் பிரமாண்ட மக்கள் பேரணி : சுவேந்துவுக்கு பதிலாக களமிறக்கப்படும் சத்ரதர் ​​மகாடோ!
மிட்னாபூரில் பிரமாண்ட மக்கள் பேரணி : சுவேந்துவுக்கு பதிலாக களமிறக்கப்படும் சத்ரதர் ​​மகாடோ!

வரவிருக்கும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரமாண்ட மக்கள் பேரணி ஒன்றை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. பேரணியைத் தொடர்ந்து அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் மாநாடு ஒன்றும் நடைபெறவுள்ளது.

இந்த பிரமாண்ட மக்கள் பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சூரானி மகாடோ துலால் முர்மு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நீர்ப்பாசன மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரியின் கோட்டையாகக் கருதப்படும் மிட்னாபூரில் இந்த பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட இருப்பது கவனிக்கத்தக்கது.

முன்னாள் மாவோவிஸ செயற்பாட்டாளரும் காவல் துறை அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் ஆணையத்தின் (பிசிஏபிஏ) தலைமை ஒருங்கிணைப்பாளருமான சத்ரதர் ​​மகாடோ பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த அவர், முதல்முறையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.

மிட்னாபூரில் பிரமாண்ட மக்கள் பேரணி : சுவேந்துவுக்கு பதிலாக களமிறக்கப்படும் சத்ரதர் ​​மகாடோ!

சுவேந்து அதிகாரியின் செல்வாக்கை சரிக்கும் வகையில், சத்ரதர் ​​மகாடோ அந்த பகுதியின் அரசியல் முகமாக மாறலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சுவேந்து அதிகாரி, பாஜகவில் சேரலாம் என யூகங்கள் எழுந்தன. மேற்கு வங்கத்தைக் காக்க காவிப் படையில் சுவேந்து சேர விரும்பினால் அவரை வரவேற்போம் என மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில், திரிணாமுல் காங்கிரசின் மக்களவை எம்.பி.யும், சுவேந்து அதிகாரியின் மகனுமான திபெண்டு அதிகாரி இப்போது டெல்லியில் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :நான்காவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details