தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை எழுதிய பெண்! - உத்தரபிரதேசம் தேஜஸ்வி தயகி

உத்தரப்பிரதேசம்: மீரட்டைச் சேர்ந்த, பன்மொழி மேல்நிலைப் பள்ளி மாணவி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளை எழுதி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

உத்தரபிரதேசம்
ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை எழுதிய பெண்

By

Published : Mar 18, 2021, 10:57 PM IST

உத்தரப்பிரதேசம் மீரட்டைச் சேர்ந்த பன்மொழி மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜஸ்வி தயகி, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளை எழுதும் அவரது குறிப்பிடத்தக்க திறமைக்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மேலும், அவர் கண்ணாடியில் எழுதும் கலையையும், தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்டார்.

தேஜஸ்வி தயகி, வலது கையால் ஆங்கிலம் மற்றும் இடது கையால் இந்தி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இது தவிர, தேஜஷ்வி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தலைகீழாக எழுத தன்னைப் பயிற்றுவித்துள்ளார். தேஜஷ்வி தனது இடது கையால் எப்படி எழுதத் தொடங்கினார் என்பதை நினைவு கூர்ந்தார். இருப்பினும், விரைவில் அவரது தந்தை குல்தீப் தியாகி, வலது கையால் எழுதும்படி வற்புறுத்தினார்.

பின்னர், தேஜஷ்வி மெதுவாக இரு கைகளாலும் தலைகீழ் வரிசையில் எழுதத் தொடங்கினார். விரைவில், அவள் ஒரு கையால் இந்தியில் எழுதவும், மறுபுறம் ஆங்கிலத்தில் எழுதவும் தன்னைப் பயிற்றுவித்தாள்.

இதுகுறித்து தேஜஷ்வி கூறுகையில், 'பெரும்பாலான தேர்வுகளில் தனது திறமையின் பலன் கிடைத்தது.

பரீட்சையின்போது, இரு கைகளாலும் எழுதுவதால் நேரத்திற்கு முன்பே முடிக்கப்படுகிறது' என்றார்.

மேலும் தேஜஷ்வியின் தந்தை தொழிலால் விவசாயி, அதே நேரத்தில் அவரது தாயார் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வருகிறார். இடைநிலைக் கல்வி கவுன்சிலில், அவரது திறமைகளை சோதித்துள்ளனர். இருப்பினும், முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details