தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து - tamilisai soundarrajan

புதுச்சேரி: கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தெலங்கானாவிலிருந்து மருந்துகளை வரவழைத்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.

கறுப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து
கறுப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து

By

Published : May 21, 2021, 8:56 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர், ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து உடனடியாக தெலங்கானாவிலிருந்து 10 ஆம்பொனைக்ஸ் மருந்துகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், உடனடி மருத்துவ உதவியை அளித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், தெலங்கானா ராஜ்பவன் அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details